Slider

Labels

Theme images by kelvinjay. Powered by Blogger.

FFFFFFFFFFFFFFFFFFFFFFF

Populars

Contact Form

Name

Email *

Message *

aaaaaaaaaaaaaaaa

bbbbbbbbbbbbbbbbbbb

all

[all][carousel1]

Author Name

HHHHHHHHHHHHHHHHHHHHH

Complex Style

all{fbig2}/all,all,all

ddddddddddddddddddd

Recent Tube

Wisata

Favourite

Event

Culture

Gallery

மதுபான விற்பனை மூலம் அரசாங்கத்தின் திறைசேரிக்கு அதிகப் பணத்தை அனுப்பி வைப்பது யாழ். மாவட்டமே

மதுபான விற்பனை மூலம் அரசாங்கத்தின் திறைசேரிக்கு அதிகப் பணத்தை அனுப்பி வைப்பது யாழ். மாவட்டமே
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் சிலவற்றில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்டார்.
”போதையிலிருந்து விடுதலையான நாடு” எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்டார்.
யாழ். முற்றவெளி மைதானத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற இந்த நிகழ்வில் ஜனாதிபதி பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார்,
சத்தமிட்டு ஆர்ப்பாட்டம் செய்து பல்வேறு விடயங்களைக் கேட்பவர்கள், எங்களுக்குத் தேவையற்ற விடயங்களும் சமூகத்திலுள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும். சாராயம் விற்பனை செய்யும் மதுபானசாலையை மூடுமாறு யாரும் ஆர்ப்பாட்டம் செய்வதில்லை. பேதைப்பொருளுக்கு எதிராக யாரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதுமில்லை, அதற்காக வீதியில் இறங்குவதுமில்லை. தேவையற்ற விடயங்களுக்காக இந்த நாட்டில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோர் ஏன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர் என நான் உங்களிடம் கேட்கின்றேன். உங்களுக்கு ஒரு கவலையான விடயத்தைக் கூற விரும்புகின்றேன். நாட்டின் 25 நிர்வாக மாவட்டங்களுள் யாழ்ப்பாணமும் ஒன்று என்பதை நீங்கள் அறிவீ்ர்கள். அதிகமாக மதுபானம் விற்பனை செய்து, அரசாங்கத்தின் திறைசேரிக்கு அதிகப் பணத்தை அனுப்பி வைப்பது யாழ். மாவட்டமே. இங்கு 69 – 70 மதுபானசாலைகள் காணப்படுகின்றன. வடமாகாணத்தில் யாழ். மாவட்டமானது போதைப்பொருள் பாவனை அதிகமாகக் காணப்படுகின்ற மாவட்டம் என்பதை மறந்து விடவேண்டாம்.
என குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் போதைப்பொருள் தொடர்பான ஆவணம், அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகத்தால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டது.
இதன்போது போதைப்பொருளுக்கு எதிரான உறுதி மொழியும் எடுக்கப்பட்டது.
அதனையடுத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ். மத்திய கல்லூரியின் 200 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார்.
இந்த நிகழ்வு அதிபர் எஸ்.எழில்வேந்தன் தலைமையில் இடம்பெற்றது.
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன், டக்ளஸ் தேவானந்தா ஆகியோரும் இந்த நிகழ்வில் பிரசன்னமாகியிருந்தனர்.
யாழ். மத்திய கல்லூரியின் 200 ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு முத்திரையொன்றும் வெளியிடப்பட்டது.
இதேவேளை, யாழ்ப்பாணத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பொலிஸ் நிலைய திறப்பு விழா ஜனாதிபதியால் இன்று திறந்து வைக்கப்பட்டது.
பொலிஸ் அணிவகுப்பு மரியாதை மற்றும் பாரம்பரிய கலை நிகழ்வுகளுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வரவேற்கப்பட்டார்.
இந்த நிகழ்வில் சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க, பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர உட்பட அரசியல் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற அங்கியைக் களைந்து விட்டு வருமாறு சம்பந்தனுக்கு ஆனந்தசங்கரி அழைப்பு

தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற அங்கியைக் களைந்து விட்டு வருமாறு சம்பந்தனுக்கு ஆனந்தசங்கரி அழைப்பு
தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற அங்கியைக் களைந்து விட்டு சுத்தமான கையுடன் அரங்கத்திற்கு வருமாறு தமிழ் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி எதிர்க்கட்சித்தலைவர் இரா. சம்பந்தனுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி கடிதமொன்றினூடாகவே எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனுக்கு இந்த அழைப்பை விடுத்துள்ளார்
தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற பதம் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு அதன் நாணயத்தை இழந்துள்ளதாகவும் இதனால் பொதுமக்களுக்கு எவ்வித நன்மையும் ஏற்படவில்லை எனவும் ஆனந்தசங்கரி அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
தமிழ் மக்களின் பரிதாபகரமான நிலையை உணராமல் கூட்டமைப்பு உறுப்பினர் காலம் கடத்தி வருவதாகவும் குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ் மக்களின் பாதுகாவலர்கள் என தம்மைப் பறைசாற்றி, விடுதலைப் புலிகளையும் தமிழ் மக்களையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைவிட்டு விட்டதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி அனுப்பியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தமிழர் விடுதலைக் கூட்டணி சில நோக்கங்களை அடைவதற்கு எத்தகைய கஷ்டங்களுக்கும் முகம்கொடுக்கத் தயாராக உள்ளது என்ற தலைப்பில் ஆறு விடயங்களை தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
அதில் முதலாவதாக, இந்த நாட்டில் மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படாதவாறு தடுக்க திடசங்கற்பம் பூண்டுள்ளதாகவும், அவ்வாறான நிலைமைகளைத் தடுப்பதற்கு தமிழர் விடுதலை கூட்டணி செயற்படுவதாகவும் இராணுவத்தினருக்கு பதிலாக பொலிஸாரின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு நடவடிகை எடுக்கப்படும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
யுத்தத்தில் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஈடுபட்டதாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அனைவரையும் எதுவித விசாரணைகளுமின்றி பொதுமன்னிப்பு பெற்றுக்கொடுக்க அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துததல் உள்ளிட்ட ஆறு விடயங்கள் குறித்த அறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.

ரங்கலயில் 56 வயதானவரைக் காணவில்லை

ரங்கலயில் 56 வயதானவரைக் காணவில்லை
கண்டி, ரங்கல, எலகொல்ல தோட்டத்தைச் சேர்ந்த ஒருவர் காணாமற்போனமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தேயிலைத் தொழிற்சாலையில் உத்தியோகஸ்தராக தொழில்புரிந்த 56 வயதான சின்னையா பாலசுப்ரமணியம் என்பவர் கடந்த 30 ஆம் திகதி காணாமற்போயுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
கடந்த 30 ஆம் திகதி தன்னிடம் 4000 ரூபா பணத்தை வழங்கிவிட்டுச் சென்றவர், 2.30 அளவில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தான் இருக்குமிடம் தெரியவில்லை என தெரிவித்ததுடன், அழைப்பு துண்டிக்கப்பட்டதாக காணாமற்போனவரின் மனைவி குறிப்பிட்டார்.
இந்த சம்பவம் தொடர்பில் ரங்கல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதற்கமைய, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், அண்மித்த பகுதியிலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக ரங்கல பொலிஸார் குறிப்பிட்டனர்.